செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கூடலூர் அருகே மான் வேட்டையின் தவறுதலாக பாய்ந்த குண்டு - ஒருவர் பலி!

09:31 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மான் வேட்டையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை மூன்றாவது டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்ஷித் . இவர் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரை யானை தாக்கியதாகக் கூறி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் உடலை கொண்டு வந்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் ஜம்ஷித் உயிரிழந்துவிட்டது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மான் வேட்டையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ஜம்ஷித் உயிரிழந்தது தெரிந்தது.

Advertisement

இந்நிலையில் தலைமறைவான நண்பர்கள் நான்கு பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் மேலும் சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Tags :
Four people surrenderedgudalurMAINman was killed by a bullet while hunting deerNilgiriThevarcholai
Advertisement