கூட்டணியில் பங்கு தருவோம், ஆட்சியில் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது - அமைச்சர் ஐ.பெரியசாமி திட்டவட்டம்!
கூட்டணியில் பங்கு தருவோம், ஆனால் ஆட்சியில் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள் அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுது கொடுத்தது இல்லை என தெரிவித்தார்.
முந்தைய ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களை குட்கா வழக்கில் சிக்கியுள்ளனர். அவர்கள் பேசுவது சரியில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆத்தூரில் எத்தனை நபர்கள் போதைப்பொருள் விற்றார்கள் என தெரியும் தற்போது அனைவரும் அந்த தொழிலை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.