கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டம்!
01:09 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
காஞ்சிபுரத்தில் தங்களுக்கான கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் பட்டு சேலைகள், கைத்தறி உடைகள் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து கூலியை ரொக்கமாக பெற்று வந்தனர்.
இந்நிலையில், கூலியை வங்கிகளில் செலுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement