செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கேரளாவிற்கு 90 சதவீதம் கனிம வளங்கள் ஏற்றுமதி : கட்டுமான பொருட்களின் விலை உயர்வு - அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேதனை!

03:05 PM Apr 02, 2025 IST | Murugesan M

கேரளாவிற்கு 90 சதவீதம் கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக,  அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனால், கட்டுமான தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள், கேரள மாநிலத்திற்கு 90 சதவீதம் கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், தேனி மாவட்டத்தில் ஜல்லி, மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

Advertisement

எனவே, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கட்டுமான பொருட்களைத் தடுத்து நிறுத்தி, பழைய விலைக்கு மணல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement
Tags :
90 percent of mineral resources exported to Kerala: Price of construction materials rises - Unorganized workers suffer!MAINகட்டுமான பொருட்களின் விலை உயர்வு
Advertisement
Next Article