கேரளாவில் தூக்க மாத்திரை கேட்டு மருந்து கடையை சூறையாடிய இளைஞர்கள் கைது!
கேரளாவில் தூக்க மாத்திரை கேட்டு மருந்தக ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு, கடையை சூறையாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கேரள மாநிலம், நெய்யாற்றங்கரை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருந்தகத்திற்கு சென்ற இளைஞர்கள், தூக்க மாத்திரை வழங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மருந்துவரின் பரிந்துரை இல்லாமல் துக்க மாத்திரை வழங்க மாட்டோம் எனக்கூறிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பயங்கர ஆயுதங்களை கொண்டு கடையை சூறையாடி உள்ளனர்.
மேலும், மருந்தாளுநர் மற்றும் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து மருந்தக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய தமிழக-கேரள எல்லைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில், மருந்தகத்தின் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.