கேரளாவில் பட்டியலின மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 64 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் அண்மையில் சிறுவர் சிறுமிகளை குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது பட்டியலினத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர், தன்னை 13 வயதில் இருந்து சுமார் 5 ஆண்டுகளாக பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தடகள வீராங்கனையை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், கொடூர செயலில் ஈடுபட்ட மாணவியின் பக்கத்து வீட்டு இளைஞர், விளையாட்டு பயிற்சியாளர்கள், சிறுவர்கள் என 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.