செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்து!

02:27 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி, தீப்பொறி பறக்க விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

கோழிக்கோடு அருகே மணச்சேரி - புலபரம்பா சாலையில் நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையோர தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய காரில் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அதில் பயணம் மேற்கொண்ட இருவர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

தொடர்ந்து விபத்தில் சிக்கிய காரையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கினர். இந்நிலையில், தீப்பொறி பறக்க கார் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
KeralaKerala: A car lost control and crashed into a roadside barrier.MAIN
Advertisement