கேரளா, பஞ்சாப், உ.பி.யில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
Advertisement
நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பண்டிகை, கலாச்சார நிகழ்ச்சிகளால் வாக்கு சதவீதம் வெகுவாக குறையும் என்பதால், 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியது.
அதன்படி கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 14 சட்டசமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. .
கேரள மாநிலத்தில் பாலக்காடு, பஞ்சாப் மாநிலத்தில் தேரா பாபா நானக், சப்பேவால், பர்னாலா மற்றும் கிட்டெர்பாஹா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீராப்பூர், காசியாபாத், கர்ஹல் உள்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.