கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!
10:20 AM Dec 25, 2024 IST | Murugesan M
கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமதுகான் பிகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
பிகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளா மாநில ஆளுநராகவும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய குமார் சிங் மிசோரம் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, மணிப்பூர் ஆளுநராக முன்னாள் உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
ஒடிசா ஆளுநராக பதவி வகித்த ரகுபர் தாஸ் ராஜினமா செய்த நிலையில், மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டியை ஒடிசா மாநில புதிய ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement