செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்கு தொடர அனுமதி : மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்!

02:06 PM Apr 04, 2025 IST | Murugesan M

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது வழக்கு தொடர மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

கேரளாவில் உள்ள கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் ​​லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பினராயி விஜயனின் மகளுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் ​​லிமிடெட் நிறுவனம் பணம் வழங்கியது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக SFIO தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வீணா விஜயனின் பெயரும் இடம்பெற்ற நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் கேரள அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள சூழலில், முதலமைச்சர் பிணராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Advertisement
Tags :
MAINPermission to file a case against Kerala Chief Minister Pinarayi Vijayan's daughter: Union Ministry of Corporate Affairs!கேரள முதலமைச்சர்வீணா விஜயன் மீது வழக்கு
Advertisement
Next Article