கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் - தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு
கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டிலிருந்து தப்பலாம் என முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
Advertisement
குழந்தைகள் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், "திரை தவிர்" என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது,செல்போன் பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கடந்த செப்டம்பர் வரை சைபர் மோசடியில் ரூ.1500 கோடி வரை மக்கள் பணம் பறிபோனதாகவும் தெரிவித்தார். திரை பார்ப்பது தொடர்நோய் என்றும், அது மன நலத்தை பாதிக்கும் என்றும் கூறினார். ,
வேலை நேரம், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து மீதமுள்ள 8 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருப்பதாக சைலேந்திரபாபு தெரிவித்தார்.