செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்? - அண்ணாமலை கேள்வி!

07:25 PM Mar 18, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். .

பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள்  வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியுள்ளதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்

சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை என்றும், திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINannamalaiNellaiTAMILNADU LAW AND ORDERDMK governmentZakir Hussain hacked to deathWaqf Board lands
Advertisement