கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா!
03:36 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Advertisement
இதற்காக சர்க்கார் பதி வனப்பகுதியில் இருந்து 75 அடி உயரம் உள்ள கொடிமரம் கொண்டுவரப்பட்டது. உப்பாற்றில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 75 அடி உயரமுள்ள கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வுகளான மயான பூஜை பிப்ரவரி 11 ஆம் தேதியும், குண்டம் இறங்கும் விழா பிப்ரவரி 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement