சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 4 கொலைகளில் தொடர்புடைய ரவுடியை கொட்டும் மழையில் போலீசார் கைது செய்தனர்.
ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த அஜய்தேவா என்பவரை 4 கொலை வழக்கு, டாஸ்மாக் கடை கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருப்புவனத்தில் நடைபெறும் உறவினரின் காதணி விழாவில் அவர் கலந்து கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து கொட்டும் மழையில் அஜய்தேவாவை கைது செய்தனர்.