For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கொல்கத்தா விமான நிலையம்: மலிவு விலை உணவு விற்பனையில் வெற்றி!

06:11 PM Jan 22, 2025 IST | Murugesan M
கொல்கத்தா விமான நிலையம்  மலிவு விலை உணவு விற்பனையில் வெற்றி

கொல்கத்தா விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் ஒரே 'மலிவு விலை உணவு விற்பனை நிலையம்' மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது, அதன் முதல் மாதத்திலேயே தினசரி சுமார் 900 வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் (NSCBI) புறப்படும் பகுதியில் அமைந்துள்ள UDAN யாத்ரி கஃபே, டீயை வழங்குகிறது.

Advertisement

அதேபோல், விமானப் பயணிகள் ஒரு பாட்டில் தண்ணீர் ₹10க்கும், காபி, இனிப்பு மற்றும் சமோசா ஒவ்வொன்றும் ₹20க்கும் விற்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சில இடங்களில் உணவகங்களை விட 200% அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஏராளமான பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (AAI) இணைந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் இந்த கஃபே அமைக்கப்பட்டது. இருப்பினும், இது ஒரு தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement