கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் விசாரணைக்காக நேரில் ஆஜராகினார்.
Advertisement
கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைந்த நபர்கள் காவலாளி ஓம்பகதூர் என்பவரைக் கொன்றுவிட்டு அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர்.
இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோடநாடு வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்பேரில் வியாழக்கிழமையன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த சுதாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.