செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - இருவர் காயம், 13 பேர் கைது!

01:13 PM Jan 28, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களின் ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த 2 மீனவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காயமடைந்த 2 மீனவர்களும் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
2 fishermen injuredKaraikal fishermen arrestedMAINsri lankan navysrilankan navy firing
Advertisement