கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு - செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இடுகரை கிராமத்தை சேர்ந்த துரை - ஆனந்தியின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் செல்போன் டார்ச் வெளிச்சத்தை கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு உதகை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மின் விநியோகத்தை முறையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.