செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல - ஆர்.எஸ்.எஸ்

04:10 PM Jan 01, 2025 IST | Murugesan M

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ வார இதழில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மாற்று வழிபாட்டுத் தலங்களில் இந்து கோயில்களைத் தேடுவது முறையற்றது என கருத்து தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ வார இதழான பாஞ்சஜன்யாவில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், மசூதியில் கோயிலைத் தேடும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெளிவான அழைப்பு விடுத்ததாகவும், மத நம்பிக்கையின் ஆதாரமாக விளங்கும் கோயிலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDHindu templesMAINPanchajanya.political gain.RSSRSS chief Mohan BhagwatRSS' official weeklySambaluttar pradesh
Advertisement
Next Article