கோயில் திருமண வைபவத்தில் மாங்கல்யம் சுற்றிவைத்த தேங்காய் 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்!
05:00 PM Apr 12, 2025 IST
|
Murugesan M
தேனி மாவட்டம், போடியில் கோயில் திருமண வைபவத்தில் மாங்கல்யம் சுற்றிவைத்த தேங்காய் 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
Advertisement
போடிநாயக்கனூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், வள்ளி தெய்வானுடைய மாங்கல்யத்தைச் சுற்றிவைத்த தேங்காய், இந்து அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டது.
Advertisement
இந்த தேங்காயைப் பழனி ஆண்டவர் - நாகஜோதி தம்பதி 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். பின்னர், தேங்காய்க்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தம்பதியிடம் வழங்கப்பட்டது.
Advertisement