செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு!

12:41 PM Apr 01, 2025 IST | Murugesan M

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெறவுள்ள கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Advertisement

தொட்டியத்தில் அமைந்துள்ள மதுரை காளியம்மன் கோயில் பங்குனி மாத தேர்த் திருவிழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, ADSP கோபால் சந்திரன் தலைமையில், DSP சுரேஷ் குமார் முன்னிலையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட போலீசார் தொட்டியம் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்றனர்.

Advertisement

வஜ்ரா வாகனங்களும் பேரணியில் அணிவகுத்துச் சென்றன. தேர்த் திருவிழாவைப் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டுமென ஒலி பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement
Tags :
MAINPolice flag parade on the occasion of the temple chariot festival!
Advertisement
Next Article