கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் - மீட்புப்பணியில் துணை ராணுவப்படை வீரர்கள்!
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் 48 சென்டி மீட்டர் வரை மழை கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் முதல் தளம் வரை மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.
மழை வெள்ளத்தில் மீட்கப்படும் மக்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவாரண முகாம் அமைக்க வசதியாக, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளா்.
இந்நிலையில், ரெயின்போ நகர் பகுதியில் வெள்ள மீட்பு பணிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளைவிட்டு பொதுமக்கள் வெளியேறி வரும் நிலையில், படகுகள் மூலம் அவர்களை துணை ராணுவப்படை வீரர்கள் மீட்டு வருகின்றனர்.