கோரத்தாண்டவம் ஆடிய டானா புயல் - 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவிப்பு!
10:10 AM Oct 28, 2024 IST
|
Murugesan M
டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
வங்கக்கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டி தீர்த்தது.
இதனால், ஒடிசாவின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. பலர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.
Advertisement
பல்வேறு பகுதிகளில் இதுவரை வெள்ளம் வடியாத நிலையில், ஒடிசாவில் டானா புயலால் 18 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 671 கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், சுமார் 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சூறாவளி மற்றும் வௌ்ளம் காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், இருப்பினும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article