கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக விருது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தை காட்சியிட 100 புதிய இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இது மிகப் பெரிய, மதிப்புமிக்க விழா என தெரிவித்த அவர், சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தை காட்சியிட 100 புதிய இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த ஆண்டு 75 படைப்பாளர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
திரைப்பட விழாவில் முதன்முறையாக புதிய விருது ஒன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளை பிரதிபலிக்கும் திரைப்படத்திற்கு விருது வழங்க உள்ளதாகவும் கூறினார்.
IFFI மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட #WAVES போன்ற உள்நாட்டு நிகழ்வுகளின் விளைவாக, இந்தியாவில் M&E துறையின் அதிவேக வளர்ச்சி குறித்தும் மத்திய அமைச்சர் விவரித்தார்.
இந்தியாவை உலகளாவிய படைப்பாளிகளின் மையமாக நிலைநிறுத்தி, படைப்பாற்றல் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில் ஊக்கியாக இந்த நிகழ்வுகளின் சாத்தியம் குறித்தும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.