கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முதல் உண்ணாமலை கல்லூரி வரை ஓட்ட பந்தயத்தை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறியவர்கள் முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பாராமல் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்ட பந்தயத்தில்
தூத்துக்குடி காமராஜர் கல்லூரி மாணவன் மாணிக்கதுரை முதல் பரிசை வென்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பாராட்டு சான்றுகளும் வழங்கி கௌரவித்தார்.