For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி!

10:19 AM Sep 22, 2024 IST | Murugesan M
கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி   மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் 4 பள்ளி மாணவிகள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 88 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் காலாண்டு தேர்வு தொடங்கியதையடுத்து 8-ஆம் வகுப்பு மாணவிகள் உடற்கல்வி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது 4 மாணவிகள் காப்பியடித்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட ஆசிரியர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவிகள், மருந்தகத்தில் இருந்து கொசு மருந்து வாங்கி குடித்துள்ளனர்.

சற்று நேரத்தில் மயக்கமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement