செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவையில் அண்ணாமலையை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுத மாணவி : நெகிழ்ச்சி சம்பவம்!

10:30 AM Dec 22, 2024 IST | Murugesan M

கோவையில் தன்னை சந்திக்க கண்ணீருடன் காத்திருந்த மாணவியை அழைத்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

கோயம்புத்தூரில், தினமலர் நாளிதழ் மற்றும் வஜ்ரம் & ரவி ஐஏஎஸ் சிவில் சர்வீஸஸ் கல்வி நிறுவனம் சார்பில் நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழகக் காவல்துறையின் முன்னாள் டிஜிபி . M.ரவி ஐபிஎஸ் , வருமானவரித் துறை கமிஷனர் . வி.நந்தகுமார் ஐஆர்எஸ் , சிவில் சர்வீஸஸ் பயிற்சியாளர். ஸ்ரீவத்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மாணவி ஒருவர் அண்ணாமலையை பார்க்க வேண்டும் என்று  நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், காலையில் இருந்து அழுது கொண்டு இருப்பதாகவும் சக மாணவிகள் தெரிவித்தனர். இதனை அறிந்து அண்ணாமலை, மலையரசி என்ற கோவை மாணவியை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Advertisement

அண்ணாமலையை சந்திக்க வேண்டும் என பல நாள் காத்திருந்த நிலையில் திடீரென பார்த்த போது மகிழ்ச்சியில் அந்த மாணவி தேம்பி தேம்பி அழுதத் தொடங்கினார்.  இதனையடுத்து அவருக்கு அறிவுரை கூறி, ஆசிர்வாதம் அளித்து அண்ணாமலை அனுப்பி வைத்தார்.

 

Advertisement
Tags :
BJP State President AnnamalaicoimbatoreFEATUREDMAINMalayarasistudent waiting to see annamalaiஅண்ணாமலையை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுத மாணவி
Advertisement
Next Article