கோவையில் கருப்பு தின பேரணி - வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ளும் சேலம் மாவட்ட நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோவை உக்கடம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கருப்பு தின பேரணி நடைபெறவுள்ளது.
இந்த பேரணியில் தமிழகம் முழுவதிலிருந்து பாஜக மட்டும் இன்றி இந்து ஆதரவு அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி ரங்காபுரத்தில் உள்ள இல்லத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர, மாவட்ட பாஜக துணைத் தலைவி சுமதி விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பாஜக மகளிர் அணி துணை தலைவவி தாரணி ரகுநாத் தெரிவித்துள்ளார்.