கோவை கருப்பு தின பேரணியில் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்டோர் கைது - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
கோவை கருப்பு தின பேரணியில் பங்கேற்ற அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு துணை போகின்ற தமிழக அரசைக் கண்டித்து, கோவையில் ற கருப்பு தின பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, , தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை கைது செய்துள்ள, போலி திராவிட மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1998-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தண்டனைக் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கின்ற காவல்துறை, அதைக் கண்டித்து அற வழியில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததன் மூலம், தொடர்ந்து தீவிரவாதத்திற்கு துணை போகின்ற தமிழக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது என எல். முருகன் தெரிவித்துள்ளார்.