கோவை சாலை பணிகளுக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் கே.என்.நேரு
03:21 PM Dec 10, 2024 IST
|
Murugesan M
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சாலைகள் அமைக்க 300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Advertisement
கோவை வெள்ளளூர் குப்பை கிடங்கை சுற்றி 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு துர்நாற்றம் வீசுவதாகவும், குப்பை கிடங்கை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளளூர் குப்பை கிடங்கின் நிலை குறித்து மாநகராட்சி ஆணையருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
Advertisement
மேலும், கோவையில் சாலைகள் அமைக்க 300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
Next Article