செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!

12:52 PM Mar 27, 2025 IST | Murugesan M

கோவை விமான நிலையத்தில்  பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertisement

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை  விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்த பெண், "தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை  திருமணம் செய்து ஹனிமூனுக்கு போயிட்டு  வந்தியா" எனக் கூறி அந்த நபரைத் தாறுமாறாக வசைபாடினார் .

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த  ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்ற போது , அந்தப் பெண்ணோ "இத்தனை பேர் நிற்கிறீர்கள், காரில் அவன் தப்பித்துச் செல்கிறான்  யாரும் அவனைப் பிடிக்க முடியவில்லையா?"  எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertisement

இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது  எதையும் கூறமுடியாது  எனக் கூறிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
Coimbatore: Woman had an argument with a man who cheated on her at the airport!MAINகோவை
Advertisement
Next Article