கோவை தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ. 42 கோடி சிக்கியதாக தகவல்!
01:15 PM Oct 28, 2024 IST | Murugesan M
கோவையில் தொழிலதிபர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 42 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
அதன் தொழிலதிபர்களான வரதராஜன் மற்றும் பொன்னுதுரை ஆகியோரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 4 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத 42 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத வருமானத்தையும் கண்டுபிடித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement