கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் ரூ. 71 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
10:55 AM Mar 21, 2025 IST
|
Ramamoorthy S
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் 71 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கேரளா போதை தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை பிடித்து சோதனை செய்தனர். அதில், சட்டவிரோதமாக 71 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவரை பிடித்து வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் எங்கு இருந்து, யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement