செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் - பட்ஜெட்டில் அறிவிப்பு

03:11 PM Mar 14, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கோவை, மதுரையில் புதிதாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10 ஆயிரத்து 740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11 ஆயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை 9 ஆயிரத்து 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீட்டித்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தாம்பரம்- கிண்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் - ஐகோர்ட்டு வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என கூறினார்.

Advertisement

தொடர்ந்து, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரயில்வே அமைப்பு உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Coimbatore metro railFinance Minister Thangam Thennarasumadurai metro railMAINtamilnadu budgettamilnadu budget 2025
Advertisement