சட்டத்தை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி!
சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தி, திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
பெங்களூருவில், பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி பணம் கேட்டு மிரட்டியதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது கணவருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதால், முதல் மனைவிக்கு வழக்கப்பட்டது போலவே, தனக்கும் 500 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்கள் தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ, சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர். ஒருவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது பல்வேறு காரணிகளை பொறுத்தது என்று கூறி, கணவர் மீது மனைவி தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்தனர்