சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து சென்றதால் நேரலையில் இருட்டடிப்பு - அதிமுக குற்றச்சாட்டு!
சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்ததால் 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் காண்பிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், நடப்பாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கடந்த 3 நாட்களாக எதிரொலித்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், யார் அந்த சார் என கோஷம் எழுப்பினர்.
4ஆம் நாள் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்தபடி பங்கேற்ற நிலையில், 2வது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் நேரலையில் காண்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களுக்கு அருகில் அமர்ந்துள்ள தங்களை நேரலையில் காண்பிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.