சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
02:54 PM Apr 03, 2025 IST
|
Ramamoorthy S
சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சிப்பதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சிக்காரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து கோஷமிடுவது இதுவே முதல்முறை என்றார்.
முதலமைச்சர் தான் நீதி வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சரே நீதிமன்றம் சென்றால் என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Advertisement
பிரதமரின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ஒரு இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படவில்லை என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசு போல் சித்தரித்து திமுக வாக்கு வங்கி அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார்.
Advertisement