சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத முதல்வர் - அன்புமணி விமர்சனம்!
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜயகணபதி உள்ளிட்டோர் மீது அதேபகுதியைச் சேர்ந்த 6 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பற்றி எரிந்தது. படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரையும் பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த அளவிற்கு துணிச்சல் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக கூறிய அன்புமணி, முதலமைச்சர் ஸ்டாலினால் செயல்பட முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.