சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல்!
01:50 PM Jan 23, 2025 IST
|
Murugesan M
வேலூரில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Advertisement
மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் மாலதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் உதவியுடன் அந்த கடையில் சோதனை நடத்தி, 30 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்தார். மேலும், கடை உரிமையாளர் கஸ்தூரி ரங்கன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement
மும்பையில் இருந்து மெத்தனால் வாங்கி வந்து தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Next Article