செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு - சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

05:14 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்காக திரைப்பட இயக்குநர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதுதொடர்பாக 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

ஜாபர் சாதிக், மனைவி அமீனாபானு, இயக்குனர் அமீர் உள்பட 12 தனி நபர்களும், 8 நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில், நீதிபதி எழில் வேலவன் முன்பு வழக்கானது விசாரணைக்கு வந்ததையடுத்து இயக்குனர் அமீர் உள்பட அனைவரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது சம்மன் அனுப்பப்படாத 3 பேருக்கு சம்மன் அனுப்புமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement
Tags :
Ameer appeared in personChennai CBI courtEnforcement DirectorateFEATUREDFilm director AmeerJaffer Sadiq.MAINMoney Laundering Act case.
Advertisement
Next Article