செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்!

02:48 PM Mar 15, 2025 IST | Murugesan M

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம்‌ அருகே அமைந்துள்ள சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

Advertisement

மாசி பெளர்ணமியையொட்டி சதுரங்கபட்டினம்‌ கடற்கரையில்‌ 26ஆம்‌ ஆண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

இதில் வரதராஜ பெருமாள்‌, பெரிய பாளையத்தம்மன் , செல்லியம்மன்‌, ஸ்ரீராமர்‌, ஷீரடி சாய்‌ பாபா, சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவர் சுவாமிகள் மேளதாளத்துடன் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Advertisement

இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க 20-க்கும் மேற்பட்ட உற்சவர் சுவாமிகளுக்கு தீர்த்தாவாரி வைபவம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
MAINTheerthavari festival on Chathuranga Pattinam beach!செங்கல்பட்டு
Advertisement
Next Article