சத்தியமங்கலம் அருகே ஆற்று நீரை விநியோகம் செய்யக் கோரி குடியிருப்புவாசிகள் சாலைமறியல்!
08:49 AM Mar 27, 2025 IST
|
Ramamoorthy S
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கணபதி நகர் பகுதி மக்கள், தங்களுக்கு ஆற்று நீரை விநியோகம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
கணபதி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், ஆழ்துளை கிணறுகள் மூலம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரும் முறையாக வழங்கப்படாத காரணத்தால், பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கக் கோரி சத்தியமங்கலம் சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பவானிசாகர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement