சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை - பிஜப்பூரில் தீவிர தேடுதல் வேட்டை!
04:23 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
Advertisement
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியபோது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Advertisement
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 22 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். அப்பகுதியில் மேலும் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement