சத்ரபதி சம்பாஜியில் ட்ரோன்கள் பறக்க தடை!
05:00 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் ட்ரோன்களை பறக்கவிட அக்டோபர் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அப்பகுதியில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி அண்மையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
Advertisement
ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானதுடன் 35-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். வன்முறைக்குக் காரணமான 54 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.
Advertisement