சனாதன தர்மத்தின் அருமை தெரியாமல் சிலர் பேசுகின்றனர் - குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
03:46 PM Jan 03, 2025 IST | Murugesan M
சனாதன தர்மத்தின் அருமை தெரியாமல் சிலர் பேசுவதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 27-ஆவது சர்வதேச வேத மாநாட்டில் பங்கேற்ற அவர், உடல் ஆரோக்கியத்தின் தகவல் களஞ்சியமாக திகழும் அதர்வண வேதம், கொரோனா காலத்தில் பேருதவி செய்ததாக தெரிவித்தார்.
Advertisement
ஆன்மிக பூமியான நமது நாட்டில் சிலர் வேதாந்தம் மற்றும் சனாதன நூல்களை பிற்போக்குத்தனம் என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்கள் அனுபவிக்கவில்லை என்றும், வக்கிரமான காலனித்துவ மனோபாவத்தில் சனாதன தர்மத்தை எதிர்க்கின்றனர் என்றும் அவர் கூறினார். நமது அறிவார்ந்த பாரம்பரியத்தைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. என்றும், வேதத்தையும் சனாதன தர்மத்தையும் புறக்கணிப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement