சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம் என உத்தரவு - பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!
சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், பக்தியோடு மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி பகவான் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் இனி விமானத்திலும் இருமுடி எடுத்துச் செல்லலாம் என ஆணை பிறப்பித்த மத்திய அரசுக்கும், வளர்ச்சி நாயகன் பாரத பிரதமர் மோடிக்கும்
, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்ருக்கும் தமிழக பாஜக
, ஐயப்ப பக்தர்கள் சார்பிலும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுநாள் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மகரவிளக்கை தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல 20.1.2025 வரை அனுமதி வழங்கி மத்திய அரசு தற்போது அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. "ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா" "ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா" என தெரிவித்துள்ளார்.