For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சபரிமலையில் நாளை மகரஜோதி! : பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000 போலீசார் குவிப்பு!

12:38 PM Jan 13, 2025 IST | Murugesan M
சபரிமலையில் நாளை மகரஜோதி    பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 000 போலீசார் குவிப்பு

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கான பாதுகாப்பிற்காக 5000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதில் 1800 போலீஸார் சபரிமலை சன்னிதானத்திலும், 800 போலீஸார் பம்பையிலும், 700 போலீஸார் நிலக்கல்லிலும், 1050 பேர் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 650 பேர் கோட்டயத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காவல்துறையினரால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே மகர ஜோதியை தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மகரஜோதிக்காக சபரிமலை நோக்கி திருவாபரண பெட்டி புறப்பட்டது. ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கத்துடன் ஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

14 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு ஆபரணங்கள் சபரிமலை வந்தடையும் நிலையில் மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்பின் சில வினாடி நேரங்களில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement