சபரிமலை! : பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள்!
சபரிமலையில் பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள் வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Advertisement
சபரிமலையில் பெருவழிப்பாதையும், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் நீலிமலை பாதையும் செங்குத்தான ஏற்றங்கள் கொண்டவை. இந்த பாதைகளில் இதய பாதிப்பு உள்ள பக்தர்கள் ஏறும்போது இதயத்துடிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக நீலிமலை முதல் அப்பாச்சிமேடு வரை இதய நோய்க்கான சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் சில நேரங்களில் பக்தர்களுக்கு மரணம் ஏற்படும் சூழல் உருவாவதால், இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து AUTOMATED EXTERNAL DEFIBRILLATORS கருவிகளை வாங்க தேவசம் போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் பக்தர்களுக்கு 10 நிமிடங்களில் இந்த கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டால், 80 சதவீதம் வரை அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5 கருவிகளை வாங்கவுள்ளதாகவும், அவை விரைவில் சன்னிதானம் வந்தடையும் எனவும் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.