சபரிமலையில் 18 படி பூஜை செய்வதற்கான முன்பதிவு 2039 ஆம் ஆண்டு வரை நிறைவு - தேவசம் போர்டு அறிவிப்பு!
சபரிமலையில் 18 படி பூஜை செய்வதற்கான முன்பதிவு, 2039 ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் 18 படி பூஜை, 18 மலைகளில் உள்ள மலை தேவதைகளை திருப்திப்படுத்த செய்யப்படுகிறது. இந்த பூஜையில், 18 படிகளிலும் பட்டு விரித்து, தேங்காய் மற்றும் குத்துவிளக்கு வைத்து மலர்களால் அலங்கரித்து, தந்திரி தலைமையில் பூஜை நடைபெறும்.
இதற்கான கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாயாகும். அதேபோல், உதயாஸ்தமன பூஜை கட்டணம் 61 ஆயிரத்து 800 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படி பூஜைக்கான முன்பதிவு 2039 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையும், உதயாஸ்தமன பூஜைக்கான முன்பதிவு, 2029 அக்டோபர் வரையும் முடிந்துள்ளது.
இதேபோல், 91 ஆயிரத்து 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட சகஸ்ர கலச பூஜைக்கான முன்பதிவு 2032ஆம் ஆண்டு நவம்பர் வரையும், களபாபிஷேக பூஜைக்கான முன்பதிவு 2025ஆம் ஆண்டு மார்ச் வரையும் முடிந்து விட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.