செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சபரிமலையில் 24 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

01:24 PM Dec 09, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறந்தது முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது. தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நிலையில், சில நாட்களாக அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் 3.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வண்டிப்பெரியார், எருமேலி மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

இதனால் தரிசனத்துக்காகவும், பிரசாதங்களை வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நடை திறந்த 24 நாட்களில், 18 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement
Tags :
18 lakh devotees visit Sabarimala in 24 days!FEATUREDiyappan devoteesKeralaMAINSabarimalaitamilnadu devotees
Advertisement